ADDED : ஜூலை 11, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முசாபர்நகர்:இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் காவி உடை அணிந்து பிச்சை எடுப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்ட போலீஸ் எஸ்.பி., சந்தோஷ் குமார் சிங் கூறியதாவது:
ஷாம்லி மாவட்டம் வேத்கேரி கிராமத்தில், ஷாஜாத் என்ற முஸ்லிம் நபர், காவி உடை அணிந்து, சோனு உபாத்யாய் என்ற பெயரில் பிச்சை எடுப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.
ஜின்ஜானா போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். பிச்சை எடுப்பது போல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்றும் விசாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.