மேற்குவங்கம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா ?
மேற்குவங்கம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா ?
ADDED : மார் 01, 2024 08:39 PM

கோல்கட்டா: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மேற்குவங்கம் வந்துள்ள பிரதமர் மோடியை, முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியில், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக், பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தால் நெருக்கடி ஏற்படவே ஷாஜஹான் ஷேக்கை கைது செய்தனர்.
இந்த சூழ்நிலையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று மேற்குவங்க மாநிலம் வந்துள்ளார். கோல்கட்டாவில் கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். அவரை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேச நேரம் கேட்டதாகவும், இதையடுத்து கவர்னர் மாளிகை வந்த ம்மதா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
முன்னதாக செய்தியாளர்களுக்கு மம்தா பானர்ஜி அளித்த பேட்டி, , மோடியை சந்திக்க போவது மரியாதை நிமித்தமானது, அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது, அரசியல் குறித்து பேச போவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

