டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு முடிவு
டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு முடிவு
ADDED : டிச 09, 2025 03:41 PM

புதுடில்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நமது நாட்டில் பொதுவாக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.2011-க்குப் பிறகு 2021-ல் நடக்கவிருந்தது கோவிட் தொற்று காரணமாகத் தாமதமானது, தற்போது 2026 மற்றும் 2027ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லோக்சபாவில் எதிர்கட்சிகள் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:
2026 மற்றும் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மூலம் தரவுகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை ஒரு பிரத்யேக போர்டல் மூலம் நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஒவ்வொரு நபரின் தகவல்களும் கணக்கெடுப்பு காலம் முழுவதும் இருக்குமாறு சேகரிக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் பிறந்த இடம் மற்றும் கடைசியாக வசித்து வந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இடம்பெயர்வு தரவு சேகரிக்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போதைய குடியிருப்பில் தங்கியிருக்கும் காலம் மற்றும் இடம்பெயர்வுக்கான காரணம் பற்றிய தகவல்களையும் சேகரிக்கப்படும்.
இவ்வாறு நித்யானந்த் ராய் கூறினார்.

