தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நேரடி விமான சேவை எத்தியோப்பியாவுக்கு துவக்கம்

நேரடி விமான சேவை எத்தியோப்பியாவுக்கு துவக்கம்

நேரடி விமான சேவை எத்தியோப்பியாவுக்கு துவக்கம்


ADDED : ஜூன் 18, 2025 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் இருந்து கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபபாவிற்கு நேரடி விமான சேவை நேற்று துவக்கப்பட்டது.

இதையொட்டி ஹைதராபாத் ராஜிவ் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கியால் எனப்படும் ஜி.எம்.ஆர்., ஹைதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ஹைதராபாதில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் அடிஸ் அபபாவிற்கு புறப்பட்டுச் சென்றது.

இங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் அடிஸ் அபபாவிற்கு விமானம் இயக்கப்படும்.

அதேபோல் அடிஸ் அபபாவில் இருந்து ஹைதராபாதுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும். பயண நேரம் 6 மணி 25 நிமிடங்கள்.

இதன் வாயிலாக ஆப்பிரிக்காவுக்கு தென்னிந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை கிடைக்கிறது என கியால் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் பணிக்கர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us