சாலை சீரமைப்பு பணியில் ராமர் கல்வெட்டு கண்டெடுப்பு
சாலை சீரமைப்பு பணியில் ராமர் கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : ஜன 20, 2024 06:07 AM

தார்வாட்: சாலையை சீரமைக்கும் பணியின்போது ராமர், லட்சுமணன் செதுக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தார்வாடின், கலிகேரி கிராமத்தின் புறநகர் பகுதியில், ஏரிக்கரைப் பாதை சீர்குலைந்திருந்தது. இதை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. நேற்று காலை தொழிலாளர்கள் ஏரிக்கரையில் மண்ணை அள்ளியபோது, ஒரு பெரிய கல்வெட்டு கிடைத்தது.
இதன் மேற்பகுதியில், சிவ பார்வதியின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சனேயர் உருவங்கள் உள்ளன. இதை கண்டு ஆச்சர்யமடைந்த கிராமத்தினர், பக்தியுடன் பூஜித்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கவுள்ள இத்தகைய நேரத்தில், ராமர், சீதை, லட்சுமணன் உள்ள கல்வெட்டு கிடைத்திருப்பது, சுப சகுனத்தின் அறிகுறி என, மக்கள் நம்புகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சிலையை, ஜனவரி 22ல் கலிகேரி கிராமத்திலேயே பிரதிஷ்டை செய்ய, கிராமத்தினர் விறுவிறுப்பான ஏற்பாடுகளை செய்கின்றனர்.