எஸ்ஐஆர் மீதான விவாதம் நிராகரிக்கப்படவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
எஸ்ஐஆர் மீதான விவாதம் நிராகரிக்கப்படவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
ADDED : டிச 01, 2025 06:41 PM

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதம் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை. பதிலளிக்க எங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என பார்லி விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் ராஜ்யசபாவில் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திலோ அல்லது இன்று எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் எந்த விஷயத்தையும் யாரும் குறை மதிப்பிற்கு உட்படுத்தவில்லை.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதம் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை. அது அரசின் பரிசீலனையில் உள்ளது. பதிலளிக்க எங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்.
இன்று விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் காலக்கெடு விதிக்க வேண்டாம். அரசு எந்த விஷயத்திலும் விவாதிக்கத் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதனால், பார்லிமென்டில் எஸ்ஐஆர் மீதான விவாதம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

