திரிணாமுல் காங்.,கில் இணைந்தார் பாஜ அதிருப்தி எம்எல்ஏ
திரிணாமுல் காங்.,கில் இணைந்தார் பாஜ அதிருப்தி எம்எல்ஏ
ADDED : பிப் 19, 2026 07:32 PM

கோல்கட்டா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, பாஜ அதிருப்தி எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் சர்மா இன்று(பிப்ரவரி 19) அதிகாரப்பூர்வமாக திரிணமுல் காங்கிரஸில் இணைந்தார்.
குர்சியாங் தொகுதியின் எம்.எல்.ஏ-வான சர்மா, கடந்த 2024 லோக்சபா தேர்தலிலேயே பாஜ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோல்கட்டாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகத்தில் அமைச்சர்கள் பிரத்யா பாசு, சசி பாஞ்சா முன்னிலையில் விஷ்ணு பிரசாத் சர்மா இணைந்தார்.
இது தொடர்பாக விஷ்ணு பிரசாத் சர்மா கூறியதாவது:டார்ஜிலிங் மலைப்பகுதி மக்களின் கோரிக்கையான கூர் காலாந்து விவகாரத்தில் பாஜ அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.மம்தா பானர்ஜியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.
இவரது விலகலைத் தொடர்ந்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 64-ஆக குறைந்துள்ளது.
பாஜ தரப்பில் இந்த விலகல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

