தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : பிப் 19, 2026 08:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 08:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட நபரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் கர்னி சேனா அமைப்பை சேர்ந்த என அடையாளம் காட்டிக் கொண்டுள்ள அவன் கூறுகையில், லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லாவை விமர்சித்தராகுல் மற்றும் 25 எம்பிக்கள் மீது பாஜ மற்றும் கர்னி சேனா அமைப்பினர் கோபத்தில் உள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறினால், அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து சூறையாடுவோம். ராகுலின் உத்தரவின் பேரில் தான் அனைத்தும் நடக்கிறது என நம்புகிறேன். ராகுல் கவனமாக கேட்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறினால், உங்கள் வீட்டிற்குள் நுழைந்து சுட்டுவிடுவோம். எம்பிக்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் அவர்களையும் ஒருவர் பின் ஒருவராக சுடுவோம். இவ்வாறு அவன் கூறியிருந்தான்.

இது சமூக ஊடகத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட ராஜ் சிங் என்பவனை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us