சுற்றுலாப் பயணிகளை தாக்கிய அதிர்ச்சி வீடியோ காட்சி; கண் கலங்க வைக்கும் சோகம்!
சுற்றுலாப் பயணிகளை தாக்கிய அதிர்ச்சி வீடியோ காட்சி; கண் கலங்க வைக்கும் சோகம்!
UPDATED : ஏப் 24, 2025 03:13 PM
ADDED : ஏப் 24, 2025 02:58 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பைசரன் புல்வெளியில் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க வந்த அப்பாவி பயணியர், 26 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.
சுற்றுலா பயணியரை குறிவைத்து தாக்கிய சம்பவத்தில், சந்தேகத்திற்குரிய நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள், முஸ்லிம் அல்லாதோரை குறிவைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க ராணுவத்தினர் போராடி வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புல் தரையில் சுற்றுலாப் பயணிகளை அமர வைத்து துப்பாக்கியால் பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர்.
வீடியோவில், பலரும் இயற்கையை ரசித்துக்கொண்டு இருக்கும் நிலையில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் மக்களை துப்பாக்கியால் சுடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ இப்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் வருத்தங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

