தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி தேர்வு
தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி தேர்வு
UPDATED : ஜூன் 10, 2024 09:54 PM
ADDED : ஜூன் 10, 2024 09:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க, வேட்பாளராக கனிமொழி வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க, பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழியும், லோக்சபா குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணை தலைவராக தயாநிதியும், கொறடாவாக ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று தி.மு.க, ராஜ்யசபா குழு தலைவராக திருச்சி சிவா, துணை தலைவராக சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.