sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்

/

திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்

திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்

திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்


ADDED : பிப் 12, 2026 11:36 AM

Google News

ADDED : பிப் 12, 2026 11:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் திமுக நிதி ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: திமுக அரசின் அடுத்த ஊழல். வரும் 2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நாளொன்றுக்கு சராசரியாக 40 டெண்டர்களை வெளியிட்டு, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அவசரகதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.

வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், என்றும் இல்லாத சாதனையாக நெடுஞ்சாலை துறைக்கான டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமாகியது? இவையெல்லாம் தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசின் தந்திரமா என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்று கொழுத்தது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் மொத்தமாக கமிஷன் அடித்து, வாரி சுருட்டிக்கொள்ள திமுக அரசு திட்டமிடுவது என்றும் நிறைவேறாது. உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, கமிஷன் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டி, விரைவில் ஊழல் மாளிகையான திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் பூட்டு போடுவர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us