ADDED : ஜூன் 25, 2026 03:45 AM

காங்., மூலம் அனைத்து பதவிகளையும், சலுகைகளையும் அனுபவித்து விட்டு, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தவர்கள், குறிப்பாக இளம் தலைவர்கள் யாரையும் மீண்டும் ஒருபோதும் கட்சியில் சேர்க்கக் கூடாது. அவர்கள் மீண்டும் வருவது பற்றி கூட சிந்திக்கக்கூடாது. இது என் தனிப்பட்ட கருத்து.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
சைவ திணிப்பு!
மேற்கு வங்கத்தில், பள்ளி மதிய உணவு திட்டத்தில் முட்டையை நீக்க பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தேர்தல் பிரசாரத்தில், மீன் சாப்பிடுவது குறித்து பேசி கலாட்டா செய்த பா.ஜ., தற்போது சைவ உணவை திணிக்கப் பார்க்கிறது. இது, குழந்தைகளின் ஊட்டச்சத்தை பறிக்கும் செயல்.
டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்., கட்சி
வேறுபட்டவர்கள் அல்ல!
காஷ்மீரி பண்டிட்கள் மீண்டும் காஷ்மீருக்கு வருவதற்கு, அரசை விட காஷ்மீர் முஸ்லிம்களும், பண்டிட்களும் இணைந்து செயல்படுவது தான் முக்கிய காரணம். முஸ்லிம்களும், பண்டிட்களும் வேறுபட்டவர்கள் அல்ல. அனைவரும் சமம். கடந்த காலத்தை பார்க்காமல், எதிர் காலத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
