புதிய கால தொழில்நுட்பம் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்: சி.பி.ஆர்.,
புதிய கால தொழில்நுட்பம் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்: சி.பி.ஆர்.,
ADDED : டிச 23, 2025 10:02 PM

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு என்பது இனி எதிர்காலக் கருத்து அல்ல, அது நிகழ்கால யதார்த்தம். நவீன கால தொழில்நட்பம் குறித்து அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை,'' என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஏஐசிடிஇ உடன் இணைந்து குரு கோவிந்த் சிங் இந்திர பிரஸ்தா பல்கலை ஏற்பாடு செய்த செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாட்டில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கம்ப்யூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட போது எதிர்ப்பை சந்தித்தன. ஆனால், இன்று உலகையே மாற்றி அமைத்துள்ளன. ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றுமும் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் கொண்டு வருகிறது. தொழில்நுட்பத்தை நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதே நமது பொறுப்பு.
செயற்கை நுண்ணறிவு என்பது இனி எதிர்காலக் கருத்து அல்ல, அது நிகழ்கால யதார்த்தம். இது சுகாதாரப் பரிசோதனை, காலநிலை, நிர்வாகம், கல்வி, நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகங்கள் வளரும் விதத்தையும், தனிநபர்கள் வாழும் மற்றும் பணிபுரியும் விதத்தையும் மாற்றி அமைக்கிறது.
உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

