லெபனான் வராதீங்க ... இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை
லெபனான் வராதீங்க ... இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை
UPDATED : செப் 26, 2024 05:08 PM
ADDED : செப் 26, 2024 02:46 AM

புதுடில்லி: லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபானான் செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். ஹமாசுக்கு ஆதரவாக, இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு முடிவு கட்ட இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நேரடி தாக்குதலில் இறங்கியது. உளவு அமைப்பினர் உதவியுடன் பேஜர்கள் வாக்கிடாக்கிகளை பிடிக்கச் செய்தது. தொடர்ந்து, லெபனான் நாட்டில் பதுங்கியுள்ள ஹிஸ்புல்லா படையினர் மீது கடந்த 24-ம் தேதி முதல் வான் தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் ஆரம்பித்துள்ளது. மூன்று நாளாக நடக்கும் இந்த தாக்குதலில் இதுவரை 585 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியர்கள் லெபானான் வருவதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளது. லெபானானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளது.
அவசர உதவி தேவையெனில் cons.beirut@mea.gov.in என்ற இ.மெயில் முகவரி அல்லது, 96176860128 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளது.

