எடியூரப்பாவுடன் ஷீலா தீட்சித்தை ஒப்பிடக்கூடாது: காங்கிரஸ்
எடியூரப்பாவுடன் ஷீலா தீட்சித்தை ஒப்பிடக்கூடாது: காங்கிரஸ்
UPDATED : ஆக 06, 2011 05:05 PM
ADDED : ஆக 06, 2011 03:47 PM

புதுடில்லி: ஊழல் விவகாரத்தில் எடியூரப்பாவுடன் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை ஒப்பிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான தணிக்கை அறிக்கை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் தேவையில்லாமல் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தவிர, இப்போட்டிக்கான மைதானங்களை கட்டுதல், விளையாட்டு கிராமம் அமைத்தல், டில்லி நகரை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக கொடுக்கப்பட்ட ஒப்பந்தகளில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தலையீட்டின் படி தான் தெரு விளக்குகள் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ. 31.07 கோடி அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. டில்லி நகரை அழகுபடுத்துதல் மற்றும் மேம்பாட்டிற்காக தேவையில்லாமல் ரூ. 101.02 ÷õடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஷீலா தீட்சித் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், எடியூரப்பா போல் அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
காங்., மறுப்பு: இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்., செய்தித்தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி, ஷீலா ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். ஊழல் விவகாரங்களில் அவரை, ஷீலா தீட்சித்தை எடியூரப்பாவுடன் ஒப்பிடக்கூடாது என்றும் திவேதி கூறியுள்ளார். அறிக்கையை கூர்ந்து பார்த்தால், பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தெரியவில்லை என்றும், சில விஷயங்களில் கூடுதல் செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் திவேதி தெரிவித்தார்.