ADDED : பிப் 09, 2025 01:40 AM

மூணாறு:மூணாறில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக டபுள் டெக்கர் பஸ் வசதியை கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் துவக்கி வைத்து பயணித்தார்.
மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் சுற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்ட 'டபுள் டெக்கர்' பஸ் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமையில் நடந்த விழாவில் கேரள போக்குவரத்து அமைச்சர் கணேஷ்குமார் துவக்கி வைத்தார்.
அமைச்சர் கூறியதாவது:
இந்த பஸ் மூணாறு டிப்போவில் இருந்து பூப்பாறை வரை தினமும் நான்கு சர்வீஸ் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டணமாக கீழ்தளத்தில் தலா ரூ.200, மேல்தளத்தில் ரூ.400 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு 50 பஸ் சர்வீஸ்கள் நடத்த தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
அதற்கு ஏற்ப கேரளாவில் இருந்துமதுரை, வேளாங்கண்ணி உட்பட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க அரசு ஆலோசித்து வருகிறது.
மாநிலத்தில் அதி விரைவு பஸ்களை ஏ.சி. பஸ்களாக மாற்றவதற்கு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றார். அமைச்சர் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் வரை பஸ்சில் பயணித்தார்.

