ADDED : செப் 21, 2024 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கமகளூரு: ஹொரநாடு ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் நேற்று முதல் ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.
சமீப காலமாக கோவில்களுக்கு வரும் பக்தர்கள் சிலர், ஷாட்ஸ், டி ஷர்ட், ஸ்கர்ட் அணிந்து கொண்டு வருகின்றனர்.
இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில், சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பா கோவிலில், ஆடை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது.
அதுபோன்று, கலசாவின் ஹொரநாடுஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவிலிலும் ஆடை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று முதல் ஆண்கள் பேன்ட், ஷர்ட், வேஷ்டி, மேல் துண்டு, பேன்ட் பைஜாமாவும்; பெண்கள் சேலையும், சுடிதார் மட்டுமே அணிந்து வர வேண்டும் குறிப்பிட்டுள்ளது.