போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சந்திப்புகளில் 'ட்ரோன்' கேமரா
போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சந்திப்புகளில் 'ட்ரோன்' கேமரா
ADDED : பிப் 04, 2024 03:59 AM
பெங்களூரு: பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நகரின் சில முக்கிய சந்திப்புகளில் சிக்னல்களை நிர்வகிப்பதில் குழப்பம் நிலவுகிறது. இதனால் ஆம்புலன்ஸ், பிற அவசர ஊர்திகள் சிரமத்துக்கு உள்ளாகின்றன.
இதை நிவர்த்தி செய்யும் வகையில், ஹெப்பால், சென்ட்ரல் சில்க் போர்டு, இப்பலுார் சந்திப்பு, மாரத்தஹள்ளி, கே.ஆர்.,புரம், கோரகுண்டேபாளையம், சாரக்கி உட்பட போக்குவரத்து நெரிசல் உள்ள நகரின் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் 'ட்ரோன் கேமரா' மூலம் ஒத்திகையில் ஈடுபட்டுஉள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, 'ட்ரோன்' கேமரா மூலம், கண்காணிக்கப்படும்.
வாகனங்கள் பழுதடைந்துள்ளதா அல்லது விபத்து ஏற்பட்டதா என்பதை அறிந்து, சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, போக்குவரத்தை சரி செய்வர்.
இதன் மூலம் முக்கிய சந்திப்புகளை கண்காணிக்க உள்ளனர்.