ADDED : நவ 11, 2024 05:13 AM
கோலார்: இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுக்க, நேற்று கோலார் போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப் பொருள் விற்போரை தண்டிக்குமாறும் முதல்வர் சித்தராமையா, போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோலார் மாவட்ட போலீசார், நேற்று 120 இளைஞர்களை, கோலாரில் உள்ள போலீஸ் பவனுக்கு அழைத்து வந்தனர். போதை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கோலார் போலீஸ் எஸ்.பி., நிகில் விளக்கினார்.
முகாமிற்கு வந்திருந்த 10 பேரை பரிசோதனை செய்ததில், ஐந்து பேர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
'போதைக்கு அடிமையாக கூடாது; உடலுக்கு மட்டும் கேடல்ல. குடும்பமே சிதைந்து போய் விடும். கடன் பட நேரிடும். தொழிலுக்கு செல்ல முடியாது. மரியாதை இழக்க நேரிடும்.
'சட்டவிரோதமாக போதைப் பொருளை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தில் கவுரவமாக வாழ வேண்டுமானால் போதைப் பொருட்களை கைவிடுங்கள்' என்று அறிவுரை வழங்கினார்.
உதவி எஸ்.பி.,க்கள் ரவிகுமார், ஜெகதீஷ் உட்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.