அம்பானி மகன் திருமணம்; அத்தனையும் மக்கள் பணம்; ஆதங்கப்படுகிறார் ராகுல்!
அம்பானி மகன் திருமணம்; அத்தனையும் மக்கள் பணம்; ஆதங்கப்படுகிறார் ராகுல்!
UPDATED : அக் 01, 2024 05:36 PM
ADDED : அக் 01, 2024 05:04 PM

பகதுர்கார்க்: '' அம்பானி மகன் திருமணத்தில் செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் அத்தனையும் உங்களுடையது'', என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.
ஹரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பகதுர்கார்க் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்னை பெரியதாக உள்ளது. அதானி வசமுள்ள முத்ரா துறைமுகத்தில் ஆயிரகணக்கான கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புகிறேன்.
அம்பானி மகன் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டது. இது அனைத்தும் மக்கள் பணம். உங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்ய வங்கிக்கடன் வாங்கி உள்ளீர்கள். ஆனால், மோடி ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளார். இதன் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 பேர் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் திருமணம் செய்யலாம். ஆனால், விவசாயி கடன் வாங்கி மட்டுமே நடத்த முடியும். இது அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல். இவ்வாறு ராகுல் பேசினார்.