ADDED : அக் 24, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 2.49 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரை, விமான நிலையத்தின் சுங்க இலாகாவினர் சோதனையிட்டனர்.
அவர் வைத்திருந்த உடமைகளில் மறைத்து எடுத்து வந்த, போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதலான அந்த போதைப் பொருளின் மதிப்பு, 2.49 கோடி ரூபாய். அதையடுத்து, அந்த போதைப்பொருளை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

