டில்லியில் புழுதிப்புயல்: திருப்பி விடப்பட்ட விமானங்கள்
டில்லியில் புழுதிப்புயல்: திருப்பி விடப்பட்ட விமானங்கள்
ADDED : ஏப் 11, 2025 09:54 PM

புதுடில்லி: தலைநகர் டில்லியில், புழுதியுடன் சூறாவளி காற்று வீசியதால், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
டில்லியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால், இன்று திடீரென பருவநிலை மாறி, திடீரென பலத்த காற்று வீசத் துவங்கியது. இத்துடன் புழுதிப்புயலும் வீசத் துவங்கியது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் பாதிப்பு டில்லி மட்டும் அல்லாமல், ஹரியானா மற்றும் உ.பி.,யிலும் ஏற்பட்டது. இதனையடுத்து டில்லிக்கு வர வேண்டிய 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதனிடையே, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. ஆபத்தான கட்டடங்கள் மற்றும் இடங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

