ADDED : மே 01, 2024 07:28 PM

ஐதராபாத்: காங்கிரஸ் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட புகாரில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவ் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்.6-ம் தேதி தெலுங்கானாவின் சிர்சில்லா நகரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக தேர்தல் ஆணையத்தில் சந்திரசேகர ராவ் மீது புகார் கூறப்பட்டது.
ஏப். 23-ம் தேதி தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசிற்கு சந்திரசேகரராவ், அளித்த பதிலில் திருப்தி இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இன்று (01.05.2024) தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நன்னடத்தையை மீறியதாக இன்று முதல் 48 மணி நேரம் சந்திர சேகராரவ் தேர்தல் பிரசாரம் எதிலும் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.