பீஹார் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: காங்கிரசுக்கு தேர்தல் கமிஷன் பதிலடி
பீஹார் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: காங்கிரசுக்கு தேர்தல் கமிஷன் பதிலடி
ADDED : ஆக 16, 2025 10:43 PM

புதுடில்லி: ஓட்டு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவை மறுத்துள்ள தேர்தல் கமிஷன், அக்கட்சி பீஹார் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறது எனக்குற்றம்சாட்டியுள்ளது.
லோக்சபா தேர்தல் முதல் ஓட்டுத் திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது குறித்து கையெழுத்து போட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கூறினாலும் அதனை அவர் ஏற்கவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓட்டு திருடர்களை ஆட்சியில் இருந்து அகற்ற ஆகஸ்ட் 17 முதல் எங்களுடன் சேருங்கள் எனக்கூறியிருந்தது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட விளக்கத்தில் கூறியுள்ளதாவது:இந்த வீடியோ ஏஐ உதவியுடன் தயாரிக்கப்பட்டது. உண்மை கிடையாது. பீஹார் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்யப்படுகிறது.
பீஹாரில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்பட்டியல் சட்டப்படி, முழு வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
* சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
* 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத் மட்டத்திலான அதிகாரிகள் முழு பங்கேற்புடன்
* சட்டசபை தொகுதி வாக்காளர்கள் முழு பங்கேற்பு
* பீஹாரில், காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளினால் நியமிக்கப்பட்ட 1.6 லட்சம் பூத் ஏஜென்ட்கள் முழு பங்கேற்புடன் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.