தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; மத்திய அரசு தரப்பில் பதில் தர முடியாது என்கிறார் கிரண் ரிஜிஜூ
தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; மத்திய அரசு தரப்பில் பதில் தர முடியாது என்கிறார் கிரண் ரிஜிஜூ
ADDED : ஆக 18, 2025 11:02 AM

புதுடில்லி: தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; அவர்கள் சார்பாக மத்திய அரசு பதில் தர முடியாது என மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: தேர்தல் கமிஷனுக்கும், காங்கிரசிற்குமான பிரச்னையை விவாதிக்க வே ண்டிய இடம் பார்லிமென்ட் அல்ல. பிரச்னையை தேர்தல் கமிஷனில் தான் காங்கிரஸ் விவாதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் தொடர்பான பிரச்னையில் அவையில் கூச்சல், குழப்பம் எழுப்ப கூடாது. தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; அவர்கள் சார்பாக மத்திய அரசு பதில் தர முடியாது. தேர்தல் கமிஷனின் செய்தி தொடர்பாளர் மத்திய அரசு கிடையாது.
இன்று பார்லிமென்டில், குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவை சிறப்பு விவாதம் மூலம் கவுரவிக்க உள்ளோம். அவரது விண்வெளி பயணம் மற்றும் இந்தியாவின் வருங்கால விண்வெளி பயணம் குறித்து விரிவாக விவாதிப்போம். அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பங்கேற்றது போலவே, குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் இந்திய விஞ்ஞானிகளை அனைத்து கட்சிகளும் வாழ்த்தி இந்த விவாதத்தில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.