5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்
5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்
UPDATED : மார் 15, 2026 12:40 PM
ADDED : மார் 15, 2026 09:43 AM

நமது டில்லி நிருபர்
சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இன்று (மார்ச் 15) இந்தியத் தேர்தல் கமிஷன் மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு, வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களுக்கு சென்ற தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் அரசுஅதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 15) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் கமிஷன் அறிவிக்க இருக்கிறது.
டில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில், தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷனர்கள் வெளியிடுகின்றனர். மேற்கு வங்கத்தில், ஐந்து முதல் ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள லோக்சபா, சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

