sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தேர்தல் வந்தாச்சு; வேலையும் துவங்கியாச்சு: கேரளாவில் 25 தொகுதிகளுக்கு இ.கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு

/

 தேர்தல் வந்தாச்சு; வேலையும் துவங்கியாச்சு: கேரளாவில் 25 தொகுதிகளுக்கு இ.கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு

 தேர்தல் வந்தாச்சு; வேலையும் துவங்கியாச்சு: கேரளாவில் 25 தொகுதிகளுக்கு இ.கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு

 தேர்தல் வந்தாச்சு; வேலையும் துவங்கியாச்சு: கேரளாவில் 25 தொகுதிகளுக்கு இ.கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு


UPDATED : மார் 15, 2026 10:33 PM

ADDED : மார் 15, 2026 10:26 PM

Google News

UPDATED : மார் 15, 2026 10:33 PM ADDED : மார் 15, 2026 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் 25 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், இந்திய கம்யூ., இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் ஏப்.,9ல் சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில், 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூ., மாநிலச் செயலர் பினய் விஸ்வம் அறிவித்தார்.

இதில், தற்போது அமைச்சர்களாக உள்ள அனில், சிஞ்சுராணி, ராஜன், பிரசாத் ஆகிய நான்கு பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், இரண்டு முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ.,க்களாக உள்ள ராஜன், முகமது முஹ்சின், டைசன், சுனில் குமார் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நாட்டிகா தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ., முகுந்தனுக்கு பதில், முன்னாள் எம்.எல்.ஏ., கீதா கோபி போட்டியிடுகிறார். கைப்பமங்கலம் எம்.எல்.ஏ., டைசன் வடக்கு பரவூரில், காங்.,கைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சதீசனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

''நீண்ட தேர்தல் பிரசாரத்துக்கு கட்சியிடம் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை என்றாலும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி யுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம்,'' என பினய் விஸ்வம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us