sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சிறப்பாக கையாண்ட சபாநாயகர்; பிரதமர் மோடி பாராட்டு

/

எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சிறப்பாக கையாண்ட சபாநாயகர்; பிரதமர் மோடி பாராட்டு

எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சிறப்பாக கையாண்ட சபாநாயகர்; பிரதமர் மோடி பாராட்டு

எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சிறப்பாக கையாண்ட சபாநாயகர்; பிரதமர் மோடி பாராட்டு

6


ADDED : மார் 15, 2026 10:30 PM

Google News

6

ADDED : மார் 15, 2026 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பின் போது சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை, பிரதமர் மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம் லோக்சபா சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். பெரும் விவாதத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லாவை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது; நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பின் போது, நீங்கள் (ஓம் பிர்லா) காட்டிய பொறுமையும், நடுநிலைமையும் பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கைகள் அவையில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. வாரிசு அரசியல் மற்றும் மன்னராட்சி மனநிலை கொண்டவர்கள், ஜனநாயக அமைப்புகளை குறுகிய வட்டத்திற்குள் சுருக்க முயற்சிக்கின்றனர். ஆரோக்கியமான விவாதம் மற்றும் ஆலோசனைகள் இருக்கும் பார்லியில், நாட்டின் அனைத்துப் பகுதிகளின் குரல்களும் ஓங்கி ஒலிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த ஓம் பிர்லா, பார்லியின் ஜனநாயக விதிகள் மற்றும் மரபுகள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள ஆழமான நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், பார்லியில் எம்பிக்களின் ஒழுங்கீனமான நடத்தையைக் கட்டுப்படுத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.






      Dinamalar
      Follow us