sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானாவில் மின் கட்டணம் உயர்வு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிப்பு

/

ஹரியானாவில் மின் கட்டணம் உயர்வு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிப்பு

ஹரியானாவில் மின் கட்டணம் உயர்வு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிப்பு

ஹரியானாவில் மின் கட்டணம் உயர்வு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிப்பு


ADDED : ஏப் 02, 2025 10:41 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஹரியானா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வீடுகளுக்கான மின்சார கட்டணம் 20 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் 50 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரத்துக்கு இரண்டு ரூபாயாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 20 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, 51- முதல் 100 யூனிட் வரை 2 ரூபாய் 50 காசுகளாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 70 காசுகளாகவும், 100 யூனிட்டுக்கு மேல் 2 ரூபாய் 75- காசுகளாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஹரியானாவில், 2020 - 20-21ம் நிதியாண்டில், 50 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் 70- காசுகளாக இருந்த மின் கட்டணம் இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டது. அதேபோல, 51 முதல் 100 யூனிட் வரை 4 ரூபாய் 50- காசுகளாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 50 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

வணிகப் பிரிவு


வணிகப் பயன்பட்டுக்கான கட்டணம் 11 கிலோவாட் வினியோக பிரிவில், ஒரு யூனிட் 6 ருபாய் 65 காசுகளாக இருந்த கட்டணம் 6 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விவசாயிகளுக்கு மாதாந்திர குறைந்தபட்ச மின் கட்டணம் 200 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us