திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும்: இபிஎஸ் கிண்டல்
திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும்: இபிஎஸ் கிண்டல்
UPDATED : அக் 17, 2025 02:41 PM
ADDED : அக் 17, 2025 02:27 PM

சென்னை: திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கிண்டல் செய்துள்ளார்.
'திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா' என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், சட்டசபை வளாகத்தில் அல்வா பாக்கெட் வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும் மருந்து உற்பத்தியை அரசு கண்காணிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டது. இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த அலட்சியமாக இருப்பதாக புகார் வந்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் ஏதோ ஏதோ சொல்கிறார்.
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் அலட்சியத்தின் காரணமாக 25 குழந்தைகள் இறந்துள்ளனர். மருந்து நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டும் 2024, 2025ல் அரசு சோதனை செய்யவில்லை. திமுக அரசில் உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும்.
2021ம் ஆண்டில் தீபாவளியின் போது 525 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. எல்லாத்துக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இப்பொழுது நீங்கள் இந்த உருட்டு கடை அல்வா, எப்படி டேஸ்ட் ஆக இருக்கிறதா என்பதை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள். எந்த அளவுக்கு இந்த அரசு அல்வா கொடுத்து ஏமாற்றுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.