ADDED : பிப் 09, 2025 06:59 AM

சிக்கமகளூரு: விஜயநகரா, ஹரப்பனஹள்ளியைச் சேர்ந்தவர் வினோதா, 39. இவர் கூலி வேலை செய்து வந்தார். காபி தோட்டத்தில் பணியாற்றும் நோக்கில், சிக்கமகளூரு, என்.ஆர்.புராவின் கத்தலேகானுவில் உள்ள எஸ்டேட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.
தோட்டத்தில் நேற்று காலை, வினோதா வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே வினோதா உயிரிழந்தார்.
யானையை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடியதால், உயிர் பிழைத்தனர். சம்பவ இடத்தை வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இனியாவது பிரச்னைக்கு தீர்வு காணும்படி, வனத்துறையிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 'காட்டு யானை நடமாடுவதால், தொழிலாளர்கள் எஸ்டேட்டில் பணியாற்ற வேண்டாம்; நடமாட வேண்டாம்' என, வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

