ADDED : ஜன 02, 2025 06:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவஹாத்தி: கடந்த 2024ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி, மாநிலத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அசாம் வனத்துறை தெரிவித்துள்ளது.
யானைகள் எண்ணிக்கை குறித்து இன்று அசாம் வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அசாமில் கடந்த 2017ம் ஆண்டில் யானைகள் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தியதில், மொத்தம் 5,719 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது.
தற்போது, 2024ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, யானைகள் எண்ணிக்கை, 5,828 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு வனத்துறை தெரிவித்துள்ளது.

