தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு

 அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு

 அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு


ADDED : பிப் 15, 2026 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில், தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ விமானங்கள் அவசர காலங்களில் தரையிறங்கு வதற்கான ஓடுதளம் நேற்று திறக்கப்பட்டது. இதில், ராணுவ விமானம் மூலம் தரையிறங்கி பிரதமர் மோடி வரலாற்று சாதனை படைத்தார்.

எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அசாமில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

குறிப்பாக, திப்ரூகர் மாவட்டம் மோரோன் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதி, 100 கோடி ரூபாய் மதிப்பில் 4.2 கி.மீ., தொலைவுக்கு ஏற்படுத்தப்பட்டது.

இதை திறந்து வைப்பதற்காக அசாம் சென்ற பிரதமர் மோடி, சவுபா விமானப்படை தளத்தில் இருந்து, 'சி - 130ஜே' என்ற ராணுவ விமானத்தில் பயணித்தார்.

இந்த விமானம், தேசிய நெடுஞ்சாலை 37ல்

தொடர்ச்சி 5ம் பக்கம்

ரூ.3,030 கோடியில் பிரம்மபுத்ரா பாலம் பிரதமர் மோடி கடந்த 2019, பிப்., 9ம் தேதிஅன்று பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து, 2020 மார்ச் 1ம் தேதி கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 3,030 கோடி ரூபாய் மதிப்பில் ஆறுவழிச் சாலையாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. வடக்கு குவஹாத்தியை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 7.75 கி.மீ., தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தால் பயண நேரம் வெகுவாக குறையும். குறிப்பாக வடக்கு குவஹாத்திக்கு 7 நிமிடங்களில் செல்ல முடியும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us