தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குப்வாராவில் ராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டை; 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

குப்வாராவில் ராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டை; 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

குப்வாராவில் ராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டை; 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்


ADDED : அக் 05, 2024 09:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 09:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, குப்வாரா பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். குகல்தார் பகுதியில் அவர்கள் தேடுதல் பணியின் போது சந்தேகத்துக்கிடமான நபர்களை கண்டனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. ராணுவம், போலீசாரின் தாக்குதலில் நடமாடியவர்கள் தீவிரவாதிகள் என்பது தெரிய வர அவர்களில் 2 பேர் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என்று அடையாளம் காணும் பணி தொடங்கி உள்ளது.

கொல்லப்பட்ட இருவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் உள்ளூர் போலீசாரும், ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us