ADDED : மார் 30, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கதுவா: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்தது.
இதையடுத்து, மாவட்டம் முழுதும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோபியான் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.