ADDED : டிச 12, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பட்கா கிராமத்தில், தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் மையம் செயல்பட்டு வந்தது, 2023ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குழு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது தெரிய வந்ததையடுத்து வழக்கு, அமலாக்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. நிதியுதவி அளித்த இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பயங்கரவாத அமைப் பிற்கான மையமாக செயல் பட்ட பட்கா கிராமத்தி லும், போரிவாலியிலும் சோதனை நடத்தப்பட்டது.
டில்லி, மேற்கு வங்கத்தின் கொல்கட்டா, உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரங்கள் உட்பட 40 இடங்களில் நடந்த சோதனையில், அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக ஆய்வில் ஈடுபட்டனர்.

