ஷிமோகாவில் ராகவேந்தரை எதிர்த்து சுயேட்சையாக ஈஸ்வரப்பா போட்டி
ஷிமோகாவில் ராகவேந்தரை எதிர்த்து சுயேட்சையாக ஈஸ்வரப்பா போட்டி
ADDED : மார் 15, 2024 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் ஷிமோகா லோக்சபா தொகுதியில் எடியூரப்பா மகன் ராகவேந்தரை எதிர்த்து ஈஸ்வரப்பா சுயேட்சையாக களம் இறங்க போவதாக அறிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டாம் கட்டமாக 72 பேர் பா.ஜ. ,வேட்டபாளர் பட்டியல் வெளியானது.
இதில் பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்தர் ஷிமோகா தொகுதியில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இத்தொகுதியில் பா.ஜ., மற்றொரு மூத்த தலைவரான ஈஸ்வரப்பா தன் மகன் கந்தோஷிற்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்பதால், ராகவேந்தரை எதிர்த்து சுயேட்சையாக களம் இறங்க போவதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.

