கடவுளாலும் பெங்களூருவை மாற்ற முடியாது: சொல்கிறார் கர்நாடக துணை முதல்வர்
கடவுளாலும் பெங்களூருவை மாற்ற முடியாது: சொல்கிறார் கர்நாடக துணை முதல்வர்
UPDATED : பிப் 20, 2025 10:00 PM
ADDED : பிப் 20, 2025 09:50 PM

பெங்களூரு : '' கடவுள் வந்தாலும் ஒரே நாளில் பெங்களூரு நகரை மாற்ற முடியாது'', என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடக தலைநகரான பெங்களூருவில் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால், அந்நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக காணப்படுகிறது. வாடகையும் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது: ஒரே நாளில் பெங்களூருவை மாற்ற முடியாது. கடவுள் வந்தாலும், அதற்கு சாத்தியம் இல்லை. ஆனால், முறையான திட்டங்கள் வகுத்து அதனை முறையாக செயல்படுத்தினால், மாற்றம் நிச்சயம்.
சாலை, பாதசாரிகளுக்கான நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட நகர்ப்புற கட்டமைப்பு பணிகளில் தரத்தை பராமரிக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், மெட்ரோ தூண்கள் உள்ளிட்டவற்றில் முறையான தரத்தை கட்டமைக்க அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.