பா.ஜ.,வில் சேர அழுத்தம்: கெஜ்ரிவால் புது குற்றச்சாட்டு
பா.ஜ.,வில் சேர அழுத்தம்: கெஜ்ரிவால் புது குற்றச்சாட்டு
UPDATED : பிப் 04, 2024 04:52 PM
ADDED : பிப் 04, 2024 03:06 PM

புதுடில்லி: பா.ஜ.,வில் சேர அழுத்தம் கொடுக்கப்பட்டதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
பா.ஜ.,வில் சேர சொல்கிறார்கள்
டில்லியில் புதிய பள்ளி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கெஜ்ரிவால் பேசியதாவது: என்னை சிறையில் அடைத்தாலும் பள்ளிகள் கட்டப்படும். மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், எங்களை விடுவிக்கிறோம் என சொல்லி பா.ஜ.,வில் சேரச் சொல்கிறார்கள். நான் பா.ஜ.,வில் சேரமாட்டேன் என்று சொன்னேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் தலைவணங்க மாட்டோம்.
உள்கட்டமைப்பு
டில்லியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு டில்லி அரசு தனது பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் 40 சதவீதம் செலவிடுகிறது. மணிஷ் சிசோடியாவின் தவறு, அவர் நல்ல பள்ளிகளை கட்டிக் கொடுத்தது தான். சத்யேந்திர ஜெயின் தவறு என்னவென்றால், அவர் நல்ல மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உருவாக்கினார். பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மணிஷ் சிசோடியா பாடுபடாமல் இருந்திருந்தால், அவர் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார். அவர்கள் (பா.ஜ.,வினர்) எல்லா வகையான சதிகளையும் உருவாக்கினர். ஆனால் எங்களைத் தடுக்க முடியவில்லை.
பள்ளிகள், ஆம் ஆத்மி கிளினிக்குகள், மருத்துவமனைகள் திறப்பு விழாவுக்குச் நான் செல்லும்போது, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து எதிராக முழக்கங்களை எழுப்புகிறார்கள். தங்கள் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெறுவார்கள் என்று ஏழைகள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை இருக்கிறது. அரசு நடத்தும் பள்ளிகளில் இது பெரிய விஷயம். இவ்வாறு அவர் பேசினார்.நல்ல கல்வி