ADDED : ஆக 17, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரா: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மதுரா, ஆக்ரா, அலிகார், ஹத்ராஸ் மற்றும் எட்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி பிரிஜ் மண்டலம் எனப்படுகிறது.
இதில் மதுரா, கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. பிற இடங்களும் ஹிந்து புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. இந்த இடங்களுக்கு ஏரா ளமான பக்தர்கள், பயணியர் வருகை தருகின்றனர் .
இந்நிலையில், புனித தலங்கள் அமைந்துள்ள மதுரா, பிருந்தாவன், பார்சனா மற்றும் கோகுல் ஆகியவற்றை இணைக்க, 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை, கிருஷ்ண ஜெயந்தியான நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
மேலும், மதுரா - பிருந்தாவனில் 646 கோடி ரூபாய் மதிப்பிலான 118 திட்டங்களுக்கும் நேற்று அடிக்கல் நாட்டினார்.