விதிப்படி ஜாமின் தரணும்; விதிவிலக்காக மட்டுமே சிறை; விளக்கம் சொன்னது சுப்ரீம் கோர்ட்
விதிப்படி ஜாமின் தரணும்; விதிவிலக்காக மட்டுமே சிறை; விளக்கம் சொன்னது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஆக 28, 2024 01:16 PM

புதுடில்லி: 'சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும், ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கான நிகழ்வுகளில் மட்டும் தான்' என உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 28) நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதி விலக்கான நிகழ்வுகளில் மட்டுமே என்பது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்திற்கும் பொருந்தும்.
* ஜாமின் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
* பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பதியப்படும் வழக்குகளில் கூட பொதுவான ஜாமின் வழங்க வேண்டும் என்று விதி கூறுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷூக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

