
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி
ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்
முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு
சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் என்ற பா.ஜ.,வின் பேச்சு, வெற்று
கோஷம்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
மோடியின் தவறான கொள்கை!
நாட்டில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பிரதமர் மோடி அரசின் தோல்வியே காரணம். மோடியின் தவறான கொள்கைகளால், ஏழை மக்களின் தட்டுகளில், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு காணப்படுவதில்லை.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,
பா.ஜ., ஆட்சியில் உடனடி தீர்வு!
ஜார்க்கண்டில், வங்கதேச ஊடுருவல்காரர்களிடம் இருந்து பழங்குடியினரின் நிலங்களை காப்பாற்ற வேண்டும். வங்கதேச ஊடுருவல், வேலையில்லா திண்டாட்டம், நீர்ப்பாசனம் ஆகியவை நம் முன் உள்ள முக்கிய பிரச்னைகள். இதற்கு பா.ஜ., ஆட்சியில் உடனடியாக தீர்வு காணப்படும்.
சம்பாய் சோரன்
முன்னாள் முதல்வர், பா.ஜ.,

