சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / இ.வி.எம்., சர்ச்சைக்கு விளக்கம் / இ.வி.எம்., சர்ச்சைக்கு விளக்கம்
/
செய்திகள்
இ.வி.எம்., சர்ச்சைக்கு விளக்கம்
ADDED : அக் 16, 2024 02:57 AM
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் சில இடங்களில் ஓட்டு எண்ணிக்கையின் போது, வெவ்வேறு பேட்டரி அளவு இருந்த ஓட்டு இயந்திரங்கள், வெவ்வேறு முடிவுகளை காட்டியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று அளித்த விளக்கம்: ஓட்டு இயந்திரங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பேட்டரியே உபயோகிக்கப்படுகிறது. அதற்கு என்று விதிகள் வகுக்கப்பட்டுஉள்ளன. ஓட்டு இயந்திரத்தை பயன்படுத்தும் நாளில் தான், 99 சதவீத அளவு சார்ஜ் உள்ள பேட்டரிகளை பொருத்துவோம். வோல்டேஜ் காரணமாக அதில் வித்தியாசங்கள் ஏற்படலாம். அனைத்து கட்சியின் முகவர்கள் முன்னிலையில் தான் பேட்டரியை பொருத்தி ஓட்டு இயந்திரத்தை சீல் வைப்போம். அதை அவர்கள் உறுதி செய்து கையொப்பம் இட்டுள்ளனர். இதுபோன்ற புகார்களுக்கு எத்தனை முறை தான் நாங்கள் விளக்கம் அளிப்பது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.