sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவா ஓட்டல் தீவிபத்து; பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு

/

கோவா ஓட்டல் தீவிபத்து; பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு

கோவா ஓட்டல் தீவிபத்து; பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு

கோவா ஓட்டல் தீவிபத்து; பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு

1


UPDATED : டிச 07, 2025 08:35 AM

ADDED : டிச 07, 2025 03:11 AM

Google News

UPDATED : டிச 07, 2025 08:35 AM ADDED : டிச 07, 2025 03:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனாஜி: வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கோவா காவல்துறை தலைவர் அலோக்குமார் கூறியதாவது:

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோ

சம்பவம் நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டனர்.

பிரதமர் வேதனை

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீவிபத்து மிகவும் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். நிலைமை குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்துடன் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது,' எனக் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.








      Dinamalar
      Follow us