தமிழகத்தில் இவிஎம் பரிசோதனை : முதல் கட்ட சோதனையை துவக்கியது தேர்தல் கமிஷன்
தமிழகத்தில் இவிஎம் பரிசோதனை : முதல் கட்ட சோதனையை துவக்கியது தேர்தல் கமிஷன்
ADDED : டிச 12, 2025 12:36 AM

சென்னை: விரைவி்ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மற்றும் விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்கும் முதல் கட்ட சோதனை துவங்கியது.
இது குறித்து அதிகாரிகள் கூறியர்தாவது: தமிழகத்தில் விரைவில் சட்டசை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இவிஎம் இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் சரி பார்க்கும் பணிகள் துவங்கி உள்ளன. சுமார் 1.58 லட்சம் இவிஎம்-கள் , 81,473 கட்டுப்பாட்டு அலகுகள், 87,188 விவிபேட் இயந்திரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. வரும் ஜனவரி மாதம் 24 ம் தேதி வரையில் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட கலெக்டர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இவர்களுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்( பெல்) நிறுவன இன்ஜினியர்கள் உதவி செய்ய உள்ளனர்.
முதலில் இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் அவை தொழில்நுட்ப ரீதியாக நல்ல நிலையில் உள்ளதா மற்றும் பிழைகள் இல்லாததா என்பதை சரிபார்க்கப்படும். வாக்குச் சாவடியில் உள்ள பொத்தான்களும் முழுமையாகச் சரிபார்க்கப்படும்.
மேலும் ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க கூடாது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467-ல் இருந்து 75,035 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

