ADDED : செப் 06, 2011 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் , துலே மாவட்டம் சாக்ரி அருகே, வேகமாக வந்த காஸ் டேங்கர் லாரி, பாலத்தில் மோதி தீப்பிடித்த விபத்தில், 12 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டம் சாக்ரி என்ற இடம் அருகே, சாலையில் நேற்று காலை, ஒரு காஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, மான்ஸ்ரா ஆற்றுப் பாலத்தில் மோதியது. இதில், டேங்கர் வெடித்து லாரி தீப்பிடித்து, ஆற்றில் விழுந்தது. அந்த நேரத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள், ஒரு லாரி, இரண்டு ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த கடைகள் ஆகியவை, தீ விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில், 12 பேர் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.