நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமாலியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, கடல் எல்லை பாதுகாப்பு பலவீனமாக இருப்பதால், அண்டை நாட்டு மீனவர்கள், அதன் எல்லையில் அத்துமீறி மீன்பிடிக்கத் துவங்கினர். அவ்வாறு வந்தவர்களை விரட்டியடித்த உள்ளூர் மீனவர்கள், அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
அது நல்ல லாபம் தரவே, அதையே அவர்கள் தொழிலாக மாற்றி கடந்த, 2005 முதல் சரக்கு கப்பல்களை கடத்தும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோமாலிய தலைநகர் மொகதீஷு துறைமுகத்தில் கடற்கொள்ளையர்களுக்கு விசுவாசமான உளவாளிகள் இருப்பதால், சரக்கு கப்பல்களை அவர்கள் எளிதாக கடத்தி வருகின்றனர்.
இதை தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இணைந்து, சோமாலியா கடற்பகுதியில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.