''இன்றைய இந்தியா, 1975ம் ஆண்டு இந்தியா அல்ல''; எமர்ஜென்சியை விமர்சித்த காங்., எம்.பி., சசி தரூர்
''இன்றைய இந்தியா, 1975ம் ஆண்டு இந்தியா அல்ல''; எமர்ஜென்சியை விமர்சித்த காங்., எம்.பி., சசி தரூர்
UPDATED : ஜூலை 10, 2025 05:56 PM
ADDED : ஜூலை 10, 2025 02:15 PM

புதுடில்லி: ''எமர்ஜென்சியின் போது சித்திரவதை மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் நடந்தது. இன்றைய இந்தியா 1975ம் ஆண்டு இந்தியா அல்ல'' என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் விமர்சித்துள்ளார்.
எமர்ஜென்சி தொடர்பாக, மலையாள தினசரி நாளிதழுக்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் எழுதி உள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: எமர்ஜென்சியின் போது மனித உரிமை மீறல்களின் கொடூரமான சம்பவங்களை உலகம் எவ்வாறு அறியாமல் இருந்தது. சித்திரவதை மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் நடந்தது. இன்றைய இந்தியா 1975ம் ஆண்டு இந்தியா அல்ல.
இந்திரா கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார். பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1975ம் ஆண்டு முதல் இந்தியா கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதிக தன்னம்பிக்கை கொண்டதாக மாறி வருகிறது. பல விஷயங்களில் வலுவான ஜனநாயகமாக மாறி வருகிறது.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து தலைவர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக மட்டும் நினைவில் கொள்ளக்கூடாது, மாறாக அதன் சிக்கல்களையும், கற்றுக்கொடுத்த பாடங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.