ADDED : ஆக 22, 2024 06:37 PM
திலக் நகர்: மேற்கு டில்லியின் கயாலா பகுதி தொழிற்சாலையின் காவலாளியை கொலை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினோத், 35, கயாலா பகுதியில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
புதன்கிழமை இரவு மர்மமான முறையில் வினோத் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடலில் சரமாரியான கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கினர்.
வினோத் வேலை செய்த தொழிற்சாலையில் பணியாற்றி ஒரு இளைஞரின் தவறான நடத்தையால் வேலை இழக்க நேரிட்டது. இதன் பின்னணியில் வினோத் இருந்ததாக அந்த இளைஞர் எண்ணினார்.
இதற்கு பழிவாங்கும் வகையில் வினோத்தை தன் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

