ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் போலி ஆதார் பான் கார்டு தயாரிப்பு
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் போலி ஆதார் பான் கார்டு தயாரிப்பு
ADDED : நவ 26, 2025 06:33 AM

பெங்களூரு: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'எக்ஸ்' வலைதளத்தில் போலியான ஆதார், பான் கார்டு கள் பதிவிடப்பட்டு உள்ளன. இதை பார்த்த பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் மென்பொருள் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர் ஹர்வீன் சிங் சதா.
இவர், கூகுள் நிறுவனத்தின், 'நானோ பனானா' எனும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன் படுத்தி, போலியான ஆதார், பான் கார்டுகளை தயார் செய்துள்ளார்.
இவற்றை, தன் 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
'இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் பல குற்றங்கள் நடக்கலாம். மேலும் போலியான ஆதார் கார்டுகள் மூலம், பயங்கரவாதிகள் நாச வேலைகள் செய்யும் ஆபத்து உள்ளது' என, பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

